மலையாள சினிமாவை இழுத்து மூடுறாங்களா!! கடுப்பாகி பதிலடி கொடுத்த மோகன்லால்..
மோகன்லால்
மலையாள சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக பயணித்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன்லால். தமிழில் பல படங்களில் நடித்துள்ள மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் எம்புரான்.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகர் மோகன்லால், சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சமீபகாலமாக மலையாள சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளால் மலையாள திரையுலகம் ஒட்டுமொத்தமாக மூடப்படுகிறது என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு மோகன்லால், நேற்று வரைக்கும் அப்படி கேள்விப்படவில்லை.
இழுத்து மூடுறாங்களா
மலையாள திரையுலகத்தை அவ்வளவு எளிதாக மூடிவிடமுடியாது, பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் அதில் அடங்கியுள்ளது. மலையாளத்தில் பல நல்ல படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.
ஏகப்பட்ட படங்கள் வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. நன்றாக இருக்கும் ஒரு திரையுலகத்தை இழுத்து மூடிவிட முடியாது என்று தரமான பதிலை லொடுத்துள்ளார் மோகன்லால். இந்த கேள்விக்கு கோபப்படாமல் பக்குவமாக மோகன்லால் பதிலளித்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.