ஜெயிலர் 2-வில் மோகன்லால் காட்சிகளை கட் செய்து தூக்கிட்டாங்க..கொந்தளித்த காஸ்டியூம் டிசைனர்

Mohanlal Rajinikanth Nelson Dilipkumar Gossip Today Jailer 2
By Jai Oct 15, 2026 03:00 PM GMT
Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் இன்று அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸாகியுள்ள படம் தான் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் 2 படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

ஜெயிலர் 2-வில் மோகன்லால் காட்சிகளை கட் செய்து தூக்கிட்டாங்க..கொந்தளித்த காஸ்டியூம் டிசைனர் | Mohanlal Scenes Cut From Jailer2 Costume Designer

படத்தை பார்த்த பலரும் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஜெயிலர் 2வில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரஃப், ஹிரித்திக் ரோஷன், பூர்ணா, நோரா வதாகி, திலீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மோகன்லால்

இந்நிலையில், மோகன்லாலின் காட்சிகள் பல ஜெயிலர் 2வில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி காஸ்டியூம் டிசைனர் ஜிஷத் ஷாம்சுடீன் என்பவர் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் வெளியிட்ட பதிவில், மோகன்லாலின் காட்சிகள் பல ஜெயிலர் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டள்ளது. நம்முடைய சூப்பர் ஸ்டாருக்கே இந்நிலை என்றால், இனி இதுபோல் Sequel வந்தால் நான் நிச்சயம் பணியாற்றமாட்டேன் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

GalleryGallery