எங்களுடைய பாவம் சும்மா விட்டது..நடிகை சரண்யாவை வெளுத்து வாங்கிய இளம் தயரிப்பாளர்.
முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து அனைத்து மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த சரண்யாவிற்கு பின் வரும் காலங்ககளில் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை இதனால் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர், முன்னணி ஹீரோக்களான அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகருக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார்.
அருவ சன்டை
சமீபத்தில் சரண்யா நடிப்பில் உருவாகியுள்ள அருவ சன்டை திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ராஜன் என்பவர் தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சரண்யா கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவர் "வேறு ஒரு படத்தில் ஷுட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் " என்று பொய் காரணம் கூறியுள்ளாராம்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் முன்னணி நடிகர்களுடைய படமாக இருந்தால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார். இது சிறிய ஹீரோக்கள் படமாக இருப்பதால் கலந்து கொள்ளவில்லை. எங்கள் பாவம் சும்மா விட்டது' என்று புலம்பியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.