மஞ்சுவாரியர் முன்பே பெட்ரூம் சீன் பற்றி பேசிய ஆர்யா, கார்த்திக்!! குழம்பிய இயக்குநர்...
Mr X படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, ஜிம் வொர்க்கவுட், சைக்கிளிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். 45 வயதாகும் ஆர்யா, நடிகை சாயிஷாவை 2019ல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனையடுத்து தற்போது, இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில், கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா, சரத்குமார், ரைசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஏப்ரம் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது Mr X படம். படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் படக்குழுவினர், பரத்வாஜ் ரங்கன் எடுத்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பெட்ரூம் சீன்
அதில், கெளதம் கார்த்திக், என்னிடம் படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க சொன்னார் இயக்குநர் மனு ஆனந்த். ஆனால், படத்தில் அந்த சிக்ஸ்பேக்கை காட்டவே இல்லை என்று கூறினார். அதற்கு மனு ஆனந்த், முதலில் கெளதம் கார்த்திற்கு பெட்ரூம் சீன் தான் இண்ட்ரோ சீனாக இருந்தது.

பெட்ரூமில் இரு பெண்களுடன் சிக்ஸ்பேக்குடன் எழுந்திருக்கும் காட்சி தான் அது, எதிர்ப்பார்க்காத விதமாக மாறிவிட்டது. அப்படி மனு ஆனந்த் சொன்னதும், வீட்ல இந்த விஷயம் தெரிந்தால், இந்த சீன் நடிக்கத்தான் அந்த படத்துல நடிக்க ஓகே சொன்னியா என்று ஆர்யா, கெளதம் கார்த்திக்கை கலாய்த்துள்ளார்.

அதன்பின், ஆர்யா, நான் பெட்ரூம் சீன் கேட்டேன் அவருக்கு இல்லை, உங்களுக்கும் இல்லைன்னு சொல்லியிருப்பார் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார். அதன்பின் கெளதம் கார்த்திக், அப்போ சரத் சாருக்கு ஏன்? வெச்சீங்க என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.