கர்ப்பமான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. அப்படியொரு மகிழ்ச்சியில் குடும்பம்
விஜய் டிவியில் சிலவருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ஆரம்ப கட்டத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தற்போது நெட்டிசன்கள் கலாய்க்க மட்டுமே இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இழந்து வேறொரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அதே போல், மிகப்பெரிய டிப்பாட்மெண்டல் கடையாக இருந்தது தற்போது பழையபடி மளிகை கடையாக மாறிவிட்டது. இந்த இரண்டு விஷயத்திற்கும் பின்னணியில் மீனாவின் தந்தை இருந்து செயல்பட்டு வருகிறார். மேலும், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் மூடவைக்க வேறொரு நபர் திட்டம்தீட்டி அதை செய்தும் முடித்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏங்கி கொண்டிருந்த நபர் முல்லை தற்போது கர்ப்பமாகி உள்ளார் போல் காட்சி ஒன்று ஒளிபரப்பாகி இருக்கிறது.. ஆம், கதிர் - முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார். அதற்காக மருத்தவ ரீதியான சிகிச்சை செய்தபின்பும் பலனளிக்கவில்லை.
ஆனால், தற்போது சீரியலில் முல்லை கர்ப்பமாக போகிறார் என்று கூறப்படுகிறது. இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் முல்லை கர்ப்பமாகிவிட்டார் எனும் நற்செய்தி வரும் என நெட்டிசன்களும் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்னென்ன நடக்க போகிறது என்று.