விராட், ரோஹித்தை நீக்கி எல்லோரையும் பகைத்துக் கொண்டார்!! கம்பீர் பதவியில் கை வைத்தால் அதான் நடக்கும்..
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது உலகிலேயே மிகவும் கடினமான பணிகளில் ஒன்று தான். கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பையும், சூப்பர் ஸ்டார் வீரர்களையும் கையாள்வது பெரும் சவாலான ஒன்று.

அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் கம்பீரை பதவியில் இருந்து நீக்கினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பலருக்கு இது பிடிக்காது, நிலைமை தவறாக போகும்போது, எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர்களை அணியிலிருந்து நீக்கும் துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு.
விராட், ரோஹித் போன்ற ஜாம்பவான்களிடம் நீங்கள் வேண்டாம் என்று சொல்ல எத்தனை பேருக்கு தைரியம் வரும். நாட்டின் நலனுக்காகவும் பயிற்சியாளர் பணிக்காகவும் எத்தனை பேரை கம்பீர் பகைத்து கொள்கிறார் என்பதை சிந்தித்து பாருங்கள்.

வீரர்களை கையாள்வது எளிதல்லா, அதை சரியாக அவர் செய்கிறார் என்று முன்னாள் வீரர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
NO விராட், ரோஹித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மாவை நீக்க கம்பீர் பரிந்துரைத்தார். அதேபோல் 2025 ஒருநாள் போட்டிகலில் கோலி, ரோஹித் மீண்டும் களம் கண்டபோது அவர்கள், 2027 உலகக்கோப்பை திட்டத்தில் இருப்பது உறுதி செய்ய கம்பீர் மறுத்துவிட்டார்.
இத்தகைய மோதல்களுக்கு மத்தியிலும் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றப்பின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என இரு முக்கிய கோப்பைகளை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.