என் ரசிகருக்கு மனைவியால் ஆபத்து!! நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓபன் டாக்..

Tamil Actress Actress Shilpa Manjunath
By Edward Mar 26, 2026 09:03 AM GMT
Report

ஷில்பா மஞ்சுநாத்

தமிழில் எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், வெப், சிங்கப்பெண்ணே, சென்னை ஃபைல்ஸ், வா வாத்தியார் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

என் ரசிகருக்கு மனைவியால் ஆபத்து!! நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓபன் டாக்.. | My Fans Face Danger From Their Wives Shilpa Manju

சமீபத்தில் ஷில்பா மஞ்சுநாத் அளித்த பேட்டியொன்றில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

என் ரசிகருக்கு மனைவியால் ஆபத்து

அதில், என்னுடைய ஆண் ரசிகர்களுக்கு அவர்களின் காதலிகளால் பிரச்சனை வருவதாக கேள்விப்பட்டேன். படத்தில் திமிர் கலந்த என் அழகை பார்த்து, இவர் என் முன்னாள் காதலி போல இருக்கிறார் என்று ரசிகர்கள் அவர்களின் மனைவிகளிடமும், காதலிகளிடமும், பெண் தோழிகளிடமும் சொல்லி புகழ்கிறார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது.

என் ரசிகருக்கு மனைவியால் ஆபத்து!! நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓபன் டாக்.. | My Fans Face Danger From Their Wives Shilpa Manju

சமீபத்தில் கூட என்னை சந்தித்த ஒரு ரசிகர், அவரது மனைவி என்னை அதிகம் வெறுப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார். ஒவ்வொரு முறையும் அவர் என்னை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய, அடுத்த நிமிடமே அதை அவரது மனைவி அன்ஃபாலோ செய்துவிடுகிறாராம்.

இதெல்லாம் ஆச்சரியம் தந்தாலும், ரசிகர்களின் மனங்களில் இப்படி தாக்கத்தை ஏற்படுத்தியதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஷில்பா மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.