ஒரு வேளை உணவுக்காக போராடியவர்!! ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் பெண் நடிகை

Bollywood Indian Actress Actress
By Edward Aug 20, 2025 12:30 PM GMT
Report

நடிகை நாதிரா

ராஜ் கபூர் இயக்க்த்தில் உருவான ஸ்ரீ 420 என்ற படத்தில் 'முட் முட் கே ந தேக்' என்ற பாடலில் வசீகரமான அசைவுகளாலும் ஜூலி படத்தில் ஸ்ரீதேவியின் கோபக்கார அம்மாவாகவும் பாலிவுட் சினிமாவில் மிரட்டி நடித்தவர் தான் நடிகை நாதிரா.

ஒரு வேளை உணவுக்காக போராடியவர்!! ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் பெண் நடிகை | Nadira Blamed Raj Film Ruining Career Struggled

1950 மற்றும் 60களில் வில்லியாக பல நடிகைகள் நடிக்க பலர் விலகியிருந்த சமயத்தில் நாதிரா முதல் பெண் வில்லியாக உருவெடுத்தார். 10, 11 வயதில் 1943ல் மெளஜ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நாதிராவுக்கு ஆண் என்ற படத்த்தில் இளவரசியாக நடித்து மிகப்பெரிய அறிமுகப்படுத்தை பெற்றார்.

ஆண் படத்தில் நடிக்க தான் ரூ. 1200 வாங்கியதாகவும் இரண்டாம் ஆண்டில் ரூ. 2500 ஆகவும் மூன்றாம் ஆண்டு ரூ. 3000 ஆகவும் உயர்ந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

முதல் 3 மாத்த்தவணையாக ரூ. 3600 கிடைத்தபோது அதை என்ன செய்வடு என்று தெரியவில்லை. அவ்வளவு பணத்தை எடுத்துச்செல்ல பயமாக இருந்ததால் மெஹ்பூப்ஜியிடம் கொடுத்து அவரது காரில் என்னை வீட்டில் இறக்கிவிட முடியுமா என்று கேட்டதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் நாத்ரா.

ஒரு வேளை உணவுக்காக போராடியவர்!! ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் பெண் நடிகை | Nadira Blamed Raj Film Ruining Career Struggled

நாதிரா தனது திரை வாழ்வில் சுமார் 73 படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீ 420 படத்திற்குப் பிறகு, நான் ஒன்றரை வருடம் பட்டினி கிடந்தேன்.

ஏனென்றால், அனைவரும் நான் அதே கருப்பு உடையில், அதே போல சிகரெட்டைப் பிடித்தபடி நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.என்று 1999ல் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நாதிரா.

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த அவர், விலை உயர்ந்த மதுபானங்களை விரும்புவார். கார்களின் மீது அலாதி பிரியம், கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியா நடிகையாக திகழ்ந்தார்.

ஒரு வேளை உணவுக்காக போராடியவர்!! ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் பெண் நடிகை | Nadira Blamed Raj Film Ruining Career Struggled

நாத்ரா சிகரெட் பிடிக்கும் வில்லியாக அனைவரது கவனத்தை பெற்று வந்த நிலையில் 2006ஆம் ஆண்டு 73வது வயதில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.