கோடிகளில் புரளும் நாக சைதன்யாவின் இரண்டாம் மனைவி!! சோபிதாவின் சொத்து மதிப்பு இதுதான்..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அவரை பிரிந்தப்பின் நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருந்து வந்ததை கடந்த சில மாதங்களுக்கு முன் உடைத்து நிச்சயம் செய்து கொண்டார்.
டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா - சோபிதா இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் நாக சைதன்யாவின் வருங்கால மனைவியும் நடிகையுமான சோபிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் ஓடிடி வெப் தொடரிலும் நடித்து வரும் சோபிதா துலிபாலாவின் தனிப்பட்ட முறையில் 160 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு சுமார் 70 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம் சோபிதா துலிபாலா.