கொலை வழக்கில் சிக்கிய நாகேஷை காப்பாத்தாமல் ஏமாற்றிய மனோரமா!! உண்மையை உடைத்த பயில்வான்
தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிக்கட்டி பறந்த காமெடி ஜாம்பவான்களில் முக்கியமானவர்கள் நாகேஷ் மற்றும் மனோரமா. அந்தகாலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. அதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நாகேஷ் அவர்களின் மனைவியின் தம்பி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் நாகேஷ்க்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதை எப்படியாவது சமாளிக்க நாகேஷ், மனோரமாவை சந்தித்து பேசியிருக்கிறார்.
வழக்கில் எனக்கு சாட்சியாக அன்று உங்கள் வீட்டில் இருந்ததாக கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் நாகேஷ். ஆனால் என்னால் அப்படி சாட்சி சொல்ல முடியாது என்று மனோரமா உதவி செய்ய மறுத்துவிட்டாராம்.
அதன்பின் நாகேஷ் நிரபராதி என்று வழக்கில் வந்தப்பின் மனோரமா - நாகேஷ் இடையில் விரிசல் ஏற்பட்டு இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தார்களாம். இந்த சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.