பஞ்சாங்கத்தில் நேபாள பேரிடன் முன்பே கணித்தது!! நடிகை நளினி சொன்ன உண்மை..
நளினி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம் என்ற ஆன்மீகப் பொருட்களுக்கான விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.
விற்பனையை தொடங்கி வைத்து ஆன்மீகப் பொருட்கள், சுவாமி சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து நடிகை நளினி பேசியுள்ளார். அப்போது, நேபாளத்தில் நடந்த பேரழிவு பற்றியும் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாங்கம்
அதில், நேபாள நாட்டில் பேரழிவு நடைபெற இருப்பதாக பஞ்சாங்கத்தில் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.
ஆகையால் அனைவரும் ஒரு நாளாவது பஞ்சாங்கத்தை படித்தால் நல்லது என்று கூறியிருக்கிறார் நளினி. மேலும் பொதுமக்கள் பஞ்சாங்கத்தை முன்கூட்டியே பார்த்து அதன்படி எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த பேரழிவில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து பல உயிர்கள் காப்பாற்ற்பட்டு இருந்திருக்கலாம் என்றும் பேசியுள்ளார்.