காசு கேட்ட நமீதா..வாயை மூடிட்டு இருந்தாதான் மனைவி க்யூட்!! கணவரால் அதிர்ந்து மச்சான்ஸ் நடிகை..
நடிகை நமீதா
2002ல் தெலுங்கில் வெளியான சொந்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பின் தமிழில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்தும் பிரபலமானார் நடிகை நமீதா.
இதனைதொடர்ந்து தமிழில் எங்கள் அண்ணா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிய நமீதா, விஜய், அஜித், சரத்குமார் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த நமீதா சில காலம் வாய்ப்பில்லாமல் இருந்தார்.
பின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தன்னுடைய நீண்டநாள் காதலர் விரேந்திர சவுத்ரி என்பவரை 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பின் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார் நடிகை நமீதா.
ரீல்ஸ் வீடியோ
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நமீதா, தன் கணவருடன் சேர்ந்து ஜாலியாக ரீல்ஸ் போட்டு வருகிறார். சமீபத்தில் காசு கொடுத்தால் தான் ஹஸ்பண்ட் ஹனியாக தெரிவார் என நமிதா சொல்ல, அதற்கு அவர் கணவர், மனைவி எப்போ க்யூட்டாக இருப்பாங்க தெரியுமா? அவங்க மியூட்டா இருந்தாதான் என்ற ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.