என்ன குமுதா இதெல்லாம்!! வாய்ப்புக்காக நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நந்திதா
தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக பல படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதன் பின் நந்திதா, "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " என்ற படத்தில் விஜய் சேதுபதிவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவர் நடித்த குமுதா கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பிஸியாக வலம் வந்த நந்திதா, சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, ஈஸ்வரன், எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்கள் எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை.

கிளாமர் புகைப்படம்
நிறைய கதாநாயகிகள் பட வாய்ப்புக்காக தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை அவர்களின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதை கவர்ந்த நந்திதாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் நீச்சல் குளத்தில் எடுக்க பட்ட கிளாமர் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அட்டகத்தி நந்திதா வா இது? என்று கேட்கும் படி கிளாமரில் இறங்கி கலக்கியுள்ளார்.