மல்லிப்பூ வெச்சது குத்தமா!! ஆஸி.யில் நடிகை நவ்யா நாயருக்கு ஏற்பட்ட சிக்கல்! காரணம் இதான்..
நவ்யா நாயர்
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நவ்யா நாயர் குறித்த ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரெலியாவின் மெல்போர்னில் விக்டோரியாவின் மலையாள சங்கம், ஓணம் பண்டிகை கொண்டாடத்திற்கு நவ்யா நாயர் அழைக்கப்பட்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் நவ்யா நாயர். விமானத்தில் ஏறுவதற்கு முன் தனது தந்தை, ஓணம் பண்டிகைக்கு செல்வதால் மல்லிப்பூவை சூடிச்செல்வது அவசியம் என்று கூறியதால் அதன்படி மல்லிப்பூவை நவ்யா நாயர் வாங்கி பையில் வைத்துள்ளார். தந்தை கொடுத்த மல்லிப்பூச்சரத்தை இரண்டாக பிரிந்துள்ளார்.
அதற்கு காரணம் கொச்சியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமானம் இல்லை என்பதால் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து வேறொரு விமானம் மாற வேண்டும். அதனால் நடிகை நவ்யா நாயர், பூச்சரத்தை இரண்டாக பிரிந்து ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு மற்றொன்றை கைப்பையில் வைத்துள்ளார்.
மல்லிப்பூ வெச்சது குத்தமா
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மெல்போர்ன் விமானநிலையத்தில் இறங்கியதும் சுங்க அதிகாரிகள், போலிசார் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதாவது நவ்யா நாயர் கைப்பையில் 15 செ.மீ மல்லிப்பூ இருப்பது கண்டுபிடித்து, ஆஸ்திரேலிய விதிமுறைகளின்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பூக்கள், செடிகள், கொடிகள், இலைகளை இறக்குமதி செய்யக்கூடாது என்ற சட்டமுள்ளது.
இதையறியாமல் நவ்யா நாயர் பூவை எடுத்துச்சென்றதால், விதிமுறைகளை மீறியதற்காக இந்திய சூபாய்ப்படி ரூ. 1.14 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த அவகாசம் அளித்துள்ளனர். இது தனக்கு ஒரு பாடம் என்று நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.