நடுரோட்டில் அழணும் போல இருக்கும்..பார்லே-ஜி பிஸ்கட் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்!! பிரபல நடிகர் ஓபன்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகை நவாசுதீன் சித்திக், தான் சிறுவயதில் கஷ்டப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.
பேட்டியொன்றில் பேசிய நவாசுதீன் சித்திக், நான் சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலத்தில் வாய்ப்புகள் வருவதுபோல் இருக்கும். ஆனால் கடைசியில் கைநழுவி போய்விடும்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக என்னை துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக் கொண்டிருந்தேன். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்போது அவை எதிர்பாராத விதமாக தடையாகிப்போகும். நடுரோட்டில் நின்று அழ வேண்டும் போல உணர்ந்திருக்கிறேன்.
சில நேரங்களில் உண்மையிலேயே அழுதும் இருக்கிறேன். ஆனாம் யாரும் என்னை பார்த்துவிடக்கூடாது என்று சுற்றிலும் கவனித்துக் கொண்டே அழுவேன்.
அந்த வறுமை நிறைந்த நாட்களில், ஒரு நாளைக்கு 3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன். இன்றுகூட அந்த பிஸ்கட்டை சாப்பிடும்போது பழைய டெல்லி நாட்கள் நினைவுக்கு வருகிறது என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.