அந்த நடிகரா வேண்டவே வேண்டாம் என திணறி ஓடிய நயன்தாரா!! உண்மையை உடைத்த லெஜண்ட் இயக்குனர்கள்..
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜவுளி கடைகளை வைத்து முன்னணி தொழிலதிபராக இருந்து வருபவர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணா. தற்போது சரவணா ஸ்டோர்ஸ் கடையை சரவணன் அருள் அதிபராக இருந்து நடத்தி வருகிறார்.

கடையின் விளம்பரத்திற்காக நடிக்க ஆரம்பித்த லெஜண்ட் சரவணா, சமீபத்தில் தி லெஜண்ட் படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது.
சமீபத்தில் தி லெஜண்ட் படத்தினை ஓடிடி தளத்தில் வெளியாகி டாப் இடத்தினை பிடித்தது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இயக்குனர் சமீபத்தில் பேட்டியொன்றில் இரட்டை இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி நயன் தாரா பற்றிய சில தகவல்களை கூறியுள்ளனர்.

அதில், இப்படம் குறித்து முதலில் நயன் தாராவிடம் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கதாநாயகி அல்லாமல் முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்க அணுகியதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் நயன் தாரா அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் இயக்குனர்கள் கூறியுள்ளனர். இதை கேட்ட நயன் தாரா ரசிகர்கள் நல்ல வேலை நடிக்கவில்லை என்று கலாய்த்தும் வருகிறார்கள்.