கல்யாணமாகி ஒரே மாதத்தில் இப்படியா மாறுவது! பாதி பட்ஜெட்டை ஆட்டைய போட்ட நயன்தாரா
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமூன் என்று ஒரு வாரம் ஜாலியாக இருந்துவிட்டு இந்தியா திரும்பினர்.
இந்தியா திரும்பிய கையோடு மும்பைக்கு ஃபிளைட்டை போட்டு இறங்கிய நயன் தாரா, அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். பாலிவுட் நடிகையானதுமே நயன்தாரா தன் சம்பள விசயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜவான் படத்திற்காக சுமார் 8 கோடி சம்பளமாக பெற்றுள்ளராம் நயன் தாரா. தமிழ் படங்களில் 5 அல்லது 6 கோடி சம்பளமாக பெற்று வந்த நயன் தாரா கல்யாணத்திற்கு பிறகு அப்படியே 10 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
தற்போது லேடி சூப்பர் ஸ்டார் 75 என அழைக்கப்பட்ட ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் நடிகை நயன் தாரா. அப்படத்தினை இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ளார்.
நடிகர் ஜெய், ராஜா ராணி படத்திற்கு பிறகு நயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக நயன் தாரா 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். அதையும் ஓகே என்று கூறி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். படத்தின் பட்ஜெட்டே 20 கோடி தானாம். அதில் பாதியை நயன் தாரா சம்பளமாக கேட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.