அவமானப்படுத்திய நயன்தாரா! 14 வருஷமாக கண்டாலே ஓடும் தனுஷ்..

dhanush nayanthara yaaradineemohini
By Edward Feb 17, 2022 04:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி தினமும் பேசும் பொருளாக மாறி இருப்பது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்திதான். விவாகரத்து பற்றி பேசுவதைவிட இருவரும் வாழ்க்கையில் கடந்தகாலத்தில் நடந்த சம்பவங்களை மீண்டும் கிளறி எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றி வருகிறார்கள்.

அப்படி ஆரம்பத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் பல விமர்சனங்களை சந்தித்து வந்துள்ளார். படிப்பை முடித்து அப்பாவின் கட்டாயத்தின்பேரில் 21 வயதில் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தில் நடிகை நயன் தாராவுடன் இணைந்து நடித்திருப்பார்.

அப்படத்தின் பிரமோஷ்ன் பேட்டியின் போது, கல்லூரி பற்றி விஜே டிடி கேட்டுள்ளார். நான் கல்லூரிக்கு செல்லவில்லை என்று கூறிய தனுஷை பார்த்து கிண்டல் செய்யும் வண்ணம் நடிகை நயன் தாரா விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

இதனால் சில நிமிடம் சங்கடத்துடன் தனுஷ் காணபட்டார். இதையடுத்து தனுஷ் 14 வருடங்களாக நயன் தாராவுடன் ஜோடிப்போட்டு நடிக்காமல் கண்டாலே ஓட்டம் பிடித்து விடுகிறாராம். அதற்கு காரணம் இதுவாகக்கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.