நயன்தாரா அப்படி..கயாடு லோஹர் இப்படி..பட பிரமோஷனில் வேறுபாடு காட்டும் நடிகைகள்..

Nayanthara Kayadu Lohar Toxic Hi Movie Immortal
By Jai Sep 05, 2026 11:00 AM GMT
Report

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் டாக்சிக் மற்றும் ஹாய் என இரு படங்கள் இரு நாட்கள் இடைவெளியில் ரிலீஸானது. அக்காவாக நடித்த டாக்சிக் படம் வெற்றியடையவில்லை. பெரியவில் வசூலையும் பெறாமல் படுதோல்வியடைந்தது. ஆனால், அவர் ஹீரோயினாக நடித்த ஹாய் படம் வெற்றியடைந்தது.

இப்படத்தினை கணவர் தயாரிப்பதால் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், ஆனால் சக்சஸ் மீட் விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சென்னையில் தியேட்டர் விசிட் அடித்தார்.

நான் பேட்டி கொடுக்க மாட்டேன், விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்ற பாலிசியை மேற்கொள்பவர், ஹாய் படத்தில் மாற்றியுள்ளார். அவரே பட தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் படத்தை ஆர்வமாக விளம்பரப்படுத்தினார், இது மற்றப்படங்களுக்கு தொடருமா என்று தெரியவில்லை.

நயன்தாரா அப்படி..கயாடு லோஹர் இப்படி..பட பிரமோஷனில் வேறுபாடு காட்டும் நடிகைகள்.. | Nayanthara Is Like Promotions Kayadulohar Is Like

கயாடு லோஹர்

அதேபோல், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர், தமிழில் வெளியான இம்மார்ட்டல் பட பிரமோஷனை புறக்கணித்தார்.

தமிழில் டிராகனுக்கு முன் நடித்த படம் இம்மார்ட்டல், அப்படி அதை ஏன் புறக்கணித்தார். சம்பள பிரச்சனையா? இல்லை ஈகோ பிரச்சனையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. அவர் மீது இம்மார்ட்டல் படகுழு கடும் கோபத்தில் இருக்கிறதாம்.

ஐ ஆம் கேம் படத்தின் செகண்ட் ஆஃப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இம்மார்ட்டல் படத்திற்கு கயாடுவின் நடிப்பு, அழகு பெரியளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.