நயன்தாராவுக்கே இந்த நிலையா? கடும் கோபத்தில் அவரது ரசிகர்கள்

Nayanthara Actress
By Parthiban.A Dec 13, 2021 11:30 AM GMT
Report

இந்த வருடம் முடிவுபெற உள்ள நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் பல்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றது. அதிகம் ட்விட் செய்யப்பட்ட படங்களின் ஹாஸ் டேக்குகள், அதிகம் லைக் ரீட்வீட் பற்ற ட்வீட் என பல்வேறு விவரங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதே போல தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகைகளில் லிஸ்டை ட்விட்டர் வெளியிட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷ் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். பூஜா ஹெக்டே, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் அதற்கடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

மேலும் ஷாக் ஆன விஷயம் என்னவென்றால் நயன்தாரா பெயர் டாப் 10 லிஸ்டில் இல்லவே இல்லை என்பது தான். அதை அறிந்து அவரது ரசிகர்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். லேடி சூப்பர்ஸ்டார் என டைட்டில் கார்டில் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நயன்தாராவுக்கே இந்த நிலையா? 

நயன்தாராவுக்கே இந்த நிலையா? கடும் கோபத்தில் அவரது ரசிகர்கள் | Nayanthara Not In Top 10 Most Tweeted