அடம்பிடிக்கும் காதலர்! நயனுக்கு மார்க்கெட் தான் முக்கியமாம்

nayanthara vigneshshivan tamilactress
By Edward Feb 14, 2022 06:10 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன் தாரா தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். ஆசையாக காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் நயன் பாலிவுட்டிலேயே பல படங்களின் கதையை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் காதலர் விக்னேஷ் சீக்கிரம் திருமணம் என்று செய்ய கேட்டுள்ளாராம்.

ஆனால் அம்மணிக்கு மார்க்கெட் அதிகமாக இருப்பதால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணம் முடிந்தபிறகு நடிக்கலாமே என்றும் ஆசை காதலர் சொல்லியும் மார்க்கெட் தான் முக்கியம் என்கிறாராம். அப்படினா இந்த வருஷமும் கிடையாதா? என்று ரசிகர்கள் அவர்கள் போடும் புகைப்படத்தில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.