என்னது நயன்தாரா கர்ப்பமா இருக்காங்களா? புகைப்படத்தை பார்த்து சர்ச்சையை கிளப்பிய ரசிகர்கள்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் பல கிசுகிசுக்களிலும் வதந்திகளிலும் சிக்கி வந்த நயன் தற்போது வரை இணையத்தில் பேசப்படும் நடிகையாக எப்போதும் இருந்து வருகிறார். இரு காதல் பிரிவிற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் லிவிங்டு கெதரி இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இருந்து வருகிறார் நயன்தாரா.
எங்கு சென்றாலும் ஜோடியாக சுற்றுவது விமானத்தில் பறப்பது என நாட்களை கழித்து வருகிறார்கள். எப்போது திருமணம் என்று பலர் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், சமீபத்தில் கையில் மோதிரத்தை காமித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர் இருவரும். இந்நிலையில் விக்னேஷ் சிவனை நயன்தாரா நெருக்கமாக அணைத்தவாறு இருக்கும் ரொமாண்டிக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்.
இதை பார்த்த ரசிகர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. திருமணத்துக்கு முன்னதாகவே நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா.? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளதாம்.