அடங்காத நயன்தாரா! விட்டுக்கொடுத்த முன்னாள் காதலர் சிம்பு! அந்த மனசு இருக்கே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கரம் பிடித்தார்.
சிம்பு - நயன் காதல்
நயன்தாராவின் ஆரம்பகால சினிமா கெரியரில் ஒருசில காதல் வலையில் சிக்கி பின் தோல்வியடைந்து பிரிந்தார். அப்படி காதல் ஜோடிகளாக சிம்புவுடன் வலம் வந்தார் சிம்பு. சில காரணத்தால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அதன்பின் சிம்பு எது எடுத்தாலும் 9 நம்பரை பயன்படுத்தி வந்தார். ஆனால் 9 நம்பர் அவருக்கான ராசியான நம்பர் என்று சிம்பு அறிமுகமானதில் இருந்தே தெரிய வந்தது உண்மை. அப்படி இருக்கையில் கூட சிம்பு படம் எது வந்தாலும் கூட்டி கழித்து பார்த்தால் அது நயன்(9) நம்பரில் தான் முடிந்துவிடும்
இந்நிலையில் சிம்பு நயன் தாராவை பிரிந்த சில காலத்தில் மணிரத்னம் படத்தில் இருந்து விலகி விடும் நிலைக்கு சென்றுள்ளாராம். அதாவது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. முதலில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன் தாராவிடம் கால்ஷீட் கேட்டு பேசப்பட்டது.
விட்டு கொடுத்த சிம்பு
ஆனால் நடிகர் சிம்பு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் நயன் தாரா அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதற்கு நான் தான் காரணம் என்பதற்காக சிம்பு அப்படத்தில் இருந்து விலகவும் துணிந்தார். அதை மீறியும் நயன் தாரா அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அதற்கு காரணம் பல படவாய்ப்புகள் இருக்கிறது என்று ஒரு காரணத்தை நயன் தாரா கூற மீண்டும் சிம்பு அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு நல்ல மனதோடு சிம்பு விலக நினைத்தாலும் சர்ச்சைகளில் எப்படியாவது சிக்கிவிடுவோம் என்று சுதாரித்துக் கொண்ட நயன் தாரா இந்த விசயத்தை தவிர்த்துள்ளார்.