எனக்கு இது பத்தாது, இன்னும் வேணும்! அடம்பிடித்த நயந்தாரா.. ஆப்பு வைத்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து சில காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், திரைத்துறையில் தனக்கான பெயரையும் சம்பாதித்தார். விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம் என திரையுலகில் உள்ள அனைவருடனும் நடித்து விட்டார்.
கதாநாயகியாக ஹீரோக்களுடன் மட்டுமே இணைந்து நடிக்காமல் சோலோ ஹீரோயினாகவும் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. அப்படி இவருடைய நடிப்பில் வெளிவந்த அறம், இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் சூப்பர்ஹிட்டானது. இதனை தொடர்ந்து தற்போது கனெக்ட், O2 போன்ற சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக நயன்தாரா ரூபாய் 4.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். வெறும் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது 22 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளதாம். இதனால் தங்களின் அடுத்த படத்திற்கும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் நயன்தாராவை அணுகியுள்ளது. O2 படம் அதிக லாபம் பெற்றதை அறிந்த நயன்தாரா தனது சம்பளத்தை ரூபாய் 4.5 கோடியில் இருந்து ரூபாய் 6 கோடியாக உயர்த்தி விட்டாராம்.
இதனால் ஷாக்கான தயாரிப்பு நிறுவனம் முதல் நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாம். ஆனால் அப்போதும் எனக்கு 6 கோடி தான் வேண்டும் என்று நயன்தாரா அடம்பிடித்துள்ளார். இதனால் அப்படத்தில் நடிக்க நயந்தாராவை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு, வேறொரு நடிகையுடன் பேச்சு வார்த்தையை துவங்கிவிட்டார்களாம்.