திருமணமாகி 5 மாதம் கூட ஆகல இப்படியொரு முடிவா? பதிலடி கொடுத்த நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கடந்த 20 ஆண்டுகளாக கடின உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை நயன் தாரா.

திருமணம்
சமீபத்தில் தான் காதலித்து வந்த விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமானது முதல் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் வரை பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார் நயன் தாரா.
காலணியுடன் கோவிக்குள் சென்றது, நெட்பிளிக்ஸ் திருமண வீடியோ, திருமணமாகி நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை, தன்னுடை தயாரிப்புக்கு மட்டும் பிரமோஷனில் கலந்து கொள்கிறார் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையில் நயன் தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கு இடையில் திருமணமாகி 5 மாதத்தில் பிரச்சனை மற்றும் சண்டை ஏற்பட்டதாகவும் சிலர் இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தனர். இதையெல்லாம் கேள்விப்பட்ட நடிகை நயன் தாரா, கனெக்ட் படத்தின் பிரமோஷன் பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார்.

பதிலடி
”என்னை சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் அவங்க எதாவது ஒன்னு எழுதுவார்கள். நான் என்ன பண்ணாலும் அதை செய்வார்கள். அது என் காதில் விழும், நான் பார்ப்பேன் ஆனால் அதை கண்டுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் அவர்களை பற்றி கவலைப்படுகிறேன், என்னை பற்றி இப்படி எழுத அவங்களுக்கு நேரம் இருக்குல, எனக்கு டைம் இல்லை அதை நான் மதிக்க மாட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தன்னை வெறுக்கும் சிலர் பற்றியும் பேட்டியில் கூறியிருந்தார்.
Lady Superstar #Nayanthara about Haters ! ????#LadySuperstarNayanthara #Thunivu pic.twitter.com/srajIpAYm9
— ? Ajith Kumar?Fan (@Anythingf4AJITH) December 21, 2022