சமந்தா, நயன்தாராவை ஓரங்கட்ட துடிக்கும் நடிகை!! கோடி சம்பளத்திற்கு போடும் புதிய பிளான்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வரும் நயன் தாரா மற்றும் சமந்தா தங்களின் இடத்தினை யாருக்கும் கொடுக்காமல் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார்கள். டாப் இடத்தினை பிடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய நடிகைகளாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் சமீபகாலமாக பல பிரச்சனைகள் வந்து மார்க்கெட்டை இழக்கும் அளவிற்கான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். நடிகை சமந்தா, அரியவகை நோயால் பல வாய்ப்புகளை தவரவிட்டும், அடுத்தடுத்த சிக்கல்களால் நயன் தாரா பல படங்களில் இருந்து விலகியும் வருகிறார்கள்.

அதுமட்டும் இல்லாது இரு நடிகைகளும் பாலிவுட் நடிகைகளாக மாறி பிஸியாக நடித்தும் வருகிறார்கள். இந்த சமயத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பல நடிகைகள் போட்டிப்போட்டு வருகிறார்கள்.
அப்படி அவர்களை பின்னுக்கு தள்ளி முதல் அச்சாணி போட்டு வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இரண்டாம் கதாபாத்திர ரோலில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாகியுள்ளார்.
அதாவது சமீபத்தில் வெளியான நடிகர் ஜெயம்ரவியின் அகிலன் படத்தில் போலிஸ் ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இதன்பின் வரிசையாக சிம்புவின் பத்து தல படத்திலும் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படங்களில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவும் இருக்கிறது. இதனால் பிரியா பவானி சங்கரின் மார்க்கெட் அதிகரிக்கத்துவங்கியுள்ளதால் அடுத்த ஆட்டத்திற்கு பெரிய பிளான் போட்டுள்ளார். இனிமேல் இரண்டாம் ரோல் நடிகையாக இல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கவும் இருக்கிறாராம்.