வேண்டவே வேண்டாம்ன்னு சினிமாவை ஒதுக்கிய நயன்தாரா.. உச்சத்தை தொட இவர் ஒருவர் தான் காரணம்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றார்.

லேடி சூப்பர் ஸ்டார்
இதனை தொடர்ந்து ஜவான் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். நயன் தாராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தொகுப்பாளினியாக டயான என்ற பெயரில் அறிமுகமாகினார். அதன்பின் சினிமாவில் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து ஐய்யா, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.
ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் நயன் தாரா கலந்து கொண்டார். அப்போது பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவிருந்தார். ஆனால் நிறைவேறாமல் போனதால் சில காலம் பிரேக் எடுத்தார்.
நயன்தாரா ரீஎண்ட்ரி
அதன்பின் தான் டிடி நிகழ்ச்சியில் கலந்து கோண்டு பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார் நயன் தாரா. எப்படி சினிமா ஆரம்பம் என்ற கேள்விக்கும் பிரேக்கிற்க்கு பின் ரீஎண்ட்ரி எப்படி என்ற கேள்வியையும் கேட்டிருந்தார் டிடி. அதற்கு நயன் தாரா, நான் பிரேக்கிற்கு பின் கல்யாணமாகி செட்டிலாகிவிடலாம் என்று நினைத்திருந்தேன்.
ராஜா ராணி படத்தில் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தது கடவுளால் தான். மேலும் சினிமாவில் நான் நடிக்க வருவேன் என்பதை நான் நம்பவில்லை. நான் இந்த இடத்திற்கு காரணம் மலையாள இயக்குனர் ஒருவர் தான்.
நான் சினிமா பேக்ரவுண்ட் இல்லாதவள். நான் வேண்டவே வேண்டாம் செட்டாகாது என்று கூறினேன். இயக்குனர் சத்யன் அந்திகண்ட் தான் அவர். அவரால் தான் இந்த இடத்திற்கு வர காரணம் என்று நயன் தாரா கூறியுள்ளார்.