பதறிய நயன்தாரா.. பிரெஸ் மீட்டில் அதிர்ச்சி சம்பவம்! வைரல் வீடியோ
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று முன்தினம் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணத்திற்கு சினிமா துறையினர் பலரும் வந்திருந்தனர்.
திருமணம் முடித்த கையேடு திருப்பதிக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் இன்று அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்ட ஹோட்டலில் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மீடியாவை சேர்ந்த அதிகம் பேர் கலந்துகொண்டிருந்தார்கள்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பவுன்சர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு பாதுகாப்பு அளித்தனர். பிரெஸ் மீட் முடிந்து அனைவரும் வெளியில் செல்லும்போது அவர்கள் இருவரையும் பவுன்சர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
அப்போது ஒரு பவுன்சர் கால் இடறி கீழே விழுந்தார். அதை பார்த்து நயன்தாரா 'ஏய்ய்ய்...' என ஷாக் ஆகி கத்தினார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
கீழே விழப்போன பவுன்சர்.. பதறிப்போன நயன்தாரா! https://t.co/wupaoCQKa2 | #nayantharavigneshshivan #pressmeet #vigneshshivan #nayanthara #tamilcinema @vigneshshivn pic.twitter.com/qbyMW65r5p
— ABP Nadu (@abpnadu) June 11, 2022
#Video| சென்னை தனியார் ஓட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவரைப் பார்த்து பதறிய நயன்தாரா!#Sunnews | #WikkiNayan | #Nayanthara pic.twitter.com/ryBHLzralP
— Sun News (@sunnewstamil) June 11, 2022