நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பவரே இவர் தானாம்... விக்கி க்ளிக்ஸ் இல்லையாம்..
லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்தார். ஆசை காதலனை கரம் பிடித்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்றார். அதன்பின் ஒரு வாரம் ஹனிமூனுக்கு பிறகு ஜவான் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்தார்.
ஒரு மாத வேலைகளுக்கு பின் நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் பறந்தார். அங்குள்ள பார்சிலோனா, வெலன்சியா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
நயன் தாரா அழகை ரசிக்கும் படியான விக்னேஷ் சிவன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது எபிசா என்ற ஸ்பெயினில் இருக்கும் தீவில் எடுக்கப்பட்ட புகைபடத்தை வெளியிட்டும் இருக்கிறார்.
ஆனால் இந்த புகைப்படங்களை எடுத்தது விக்னேஷ் சிவன் கிடையாது இந்த நபராம். அங்கிருக்கும் பிரபல போட்டோகிராஃபர் தான் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் என்று விக்னேஷ் டேக் செய்துள்ளார்.