என் கணவரை அவமானப்படுத்திய நடிகர்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மறுக்கும் நயன்தாரா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நயன் தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா
கடந்த ஆண்டு தான் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹனிமூனிற்கு பின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வந்த நிலையில் திடீரென வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.
குழந்தைகளுடன் நேரத்தில் செலவிட்டு வந்த நயன், தனது கணவருக்காக நடிகர் அஜித்தின் 62 வது படத்தினை இயக்கும் வாய்ப்பினை லைக்கா நிறுவனத்திடம் பேசி வாங்கி கொடுத்துள்ளார். மனைவியின் சிபாரிசில் படத்தின் வேலைகளில் 8 மாதங்கள் பணிசெய்து ரெடி செய்திருந்தார் விக்னேஷ் சிவன். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு லைக்கா மற்றும் அஜித்திடம் கதையை கூறியிருக்கிறார்.
ஆனால் இருவருக்கும் கதை பிடிக்கவில்லை என்று அஜித் விக்னேஷ் சிவனை 62வது படத்தில் இருந்து தூக்கிவிட்டார். 8 மாதங்கள் கொடுத்தும் இப்படி சொதப்பியதால் தன் கணவரின் பெயர் கெட்டுவிடும் என்று நயன் தாராவே அஜித் மற்றும் லைக்காவிடம் பேசியிருக்கிறார்.

அஜித்தின் 62
ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் 62 வது படத்தினை கொடுத்துள்ளார் அஜித். இதனால் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் நயன் தாரா தன் கணவரை அவமானப்படுத்தி அனுப்பிவிட்ட அஜித் படத்தில் இனிமேல் நடிக்கபோவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம்.
பில்லா, ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் ஜோடிப்போட்டு நடித்து ஹிட் கொடுத்த பங்கு நயனுக்கும் உண்டு. அப்படி இருக்கும் நயன், அஜித் படத்திற்காக கோடி கொடுத்தாலும் நடிக்க போவதில்லை என்று கூறியுள்ள தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
