நயன்தாரா - விக்னேஷ் மகன்களா இது!! பிறந்து ஒரு வருஷத்துல இப்படி வளர்ந்துட்டாங்க..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது பாலிவுட் நடிகையாக ஜவான் படத்தின் மூலம் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தும் நடிப்பில் ஆர்வம் காட்டி கோடியில் சம்பளம் வாங்கி சொத்தை சேர்த்து வருகிறார். சேர்த்த சொத்தை வைத்து இரட்டை குழந்தைகளுக்காக பல கோடியில் முதலீடும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம், லிப்பாம் தொழில் உள்ளிட்ட பல தொழில்களை ஆரம்பித்ததை போன்று தற்போது மகன்களுக்காக வேறொரு தொழிலை ஆரம்பித்திருக்கிறார் நயன் - விக்கி ஜோடி. மெலும் 9 Skin என்ற பிராடெக்டையும் நேற்று அறிமுகப்படுத்தி இருந்தார்.
அதற்கு காரணம் தன் இரட்டை குழந்தையின் பிறந்தநாள் தானாம். மகன்களுடன் நயன் - விக்கி எடுத்த குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். ஒரே வருஷத்தில் இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.