25 கோடிக்கு ஆப்பு வைத்து நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்! விக்னேஷ் சிவன் - நயன்தாரா செய்த தவறு இது தானாம்?

Nayanthara Vignesh Shivan
By Edward Jul 20, 2022 10:23 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் காத்திருந்த காதல் தற்போது கல்யாணத்தையும் முடித்துவிட்டனர்.

திருமணத்திற்கு பின்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்ற நயன் தாரா - விக்னேஷ் சிவன் ஒரு வாரம் கழித்து மும்பை பிளைட்டை பிடிக்க. நயன் தாரா ஜவான் படத்தின் ஷூட்டிற்கு சென்றுவிட்டார்.

அதன்பின் தமிழகம் வந்த விக்னேஷ் ஒலியாட்டிக் செஸ் போட்டிக்கான இயக்கத்தினை ஆரம்பித்தார். தங்கள் திருமணத்தை மிகச்சிறப்பாக பாதுக்காப்புடன் முடித்த நயன் - விக்னேஷ் 25 கோடிக்கு திருமண வீடியோ கவரேஜை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது.

25 கோடிக்கு ஆப்பு வைத்து நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்! விக்னேஷ் சிவன் - நயன்தாரா செய்த தவறு இது தானாம்? | Nayanthara Vignesh Sivan Issues Netflix Marriage

நெட்பிளிக்ஸ் கோபம்

ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்நிறுவனம் விலகியதாகவும் கூறப்பட்டது. அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்பார்ப்பை குறைத்ததால் இனிமேல் அதனால் என்ன பயன் என்று நினைத்துள்ளார்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

திருமணத்தை வைத்து 25 கோடி சம்பாதிக்கலாம் என்றும் திருமணத்தில் செலவான செலவுகளில் ஒரு பைசா கூட நயன் - விக்னேஷ் செலவிடவில்லை என்றும் கூறப்பட்டது.

யார் மேல் தவறு

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனரும் மூத்த நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஊடகத்திற்கு அளித்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

25 கோடிக்கு ஆப்பு வைத்து நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்! விக்னேஷ் சிவன் - நயன்தாரா செய்த தவறு இது தானாம்? | Nayanthara Vignesh Sivan Issues Netflix Marriage

அது இணையத்தில் மிகவும் வரவேற்பு பெற்று வைரலாகியது. அதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அந்த ஒப்புந்தத்தில் இருந்து விலகியுள்ளார்களாம். அதன்பின் தான் மற்ற நட்சத்திரங்களுடன் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளாராம்.

நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்

ஆனால் இதுகுறித்து விக்னேஷ் சிவன் அல்லது நயன்தாரா தகுந்த விளக்கம் அளித்தால் தான் இதன் மீது என்ன தவறு என்று தெரியவரும் என்று கூறியுள்ளார். 

மேலும் இதுகுறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம், நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பணத்தை திருப்பி கொடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் என்ற செய்தியும் இணையத்தில் வெளியாகியுள்ளது. கூடிய சீக்கிரம் நயன்தாரா விக்னேஷ் திருமண வீடியோவை வெளியிடுவார்கள் என்ற தகவலையும் விக்னேஷ் - நயன் தரப்பில் கூறப்பட்டு வருகிறதாம்.