குழந்தைகள் குறித்து நயன்தாரா போட்ட அப்படி ஒரு பதிவு.. இணையத்தில் வைரல்
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது.
நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
நடிப்பில் பிஸியாக இருப்பினும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா. அவ்வப்போது தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.
இணையத்தில் வைரல்
இந்நிலையில், தற்போது தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்து அதன் கீழ், "என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் தேர்ந்தெடுப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.