அந்த வேலையை விட்டுவைக்காத நயன்தாரா!! அஜித்துக்கு தெரியாமல் இதையும் செஞ்சிட்டாங்களே

Ajith Kumar Nayanthara Gossip Today
By Edward Dec 16, 2022 08:33 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் மலையாள இயக்குனர் ஒருவரின் மனசிக்கரே என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வேலையை விட்டுவைக்காத நயன்தாரா!! அஜித்துக்கு தெரியாமல் இதையும் செஞ்சிட்டாங்களே | Nayanthara Worked As Assistant Director Arrambam

அதன்பின் மலையாளத்தில் இரு படங்களில் நடித்து முடித்தப்பின் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நடித்து அறிமுகமாகினார். பின் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான தமிழில் இரண்டாம் படத்தில் நடித்து பிரபலமானார்.

லேடி சூப்பர் ஸ்டார்

அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் சில ஆண்டுகளில் பிரிந்தார். பின் பிரபுதேவாவை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிவிடும் அளவிற்கு முடிவெடுத்தார்.

ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தை தமிழ் ரசிகர்களால் பெற்று வந்தார். பின் விக்னேஷ் சிவனை காதலித்து ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றார். கணவருடன் இணைந்து ரவுடி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் லிப்பான் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார் நயன் தாரா. இந்நிலையில் நயன் தாரா நடிப்பைத்தாண்டி இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

அந்த வேலையை விட்டுவைக்காத நயன்தாரா!! அஜித்துக்கு தெரியாமல் இதையும் செஞ்சிட்டாங்களே | Nayanthara Worked As Assistant Director Arrambam

உதவி இயக்குனராக

அப்படி இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன் தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் ஆரம்பம். அப்படத்தில் நடிகை நயன் தாரா உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறாராம். அப்படத்தின் ஷூட்டிங்கின் போது புல்லர் புரூப் ஜாக்கெட்டுகளை உதவி இயக்குனர்கள் கொண்டுவர தாமதப்படுத்தியிருந்ததால் விஷ்ணுவர்தன் அவர்கள் மீது கோபப்பட்டு வெளியே போகச்சொல்லியிருக்கிறார். இதனால் நயன் தாரா அன்று எனக்கு ஷூட் இல்லை நான் கிளாப் பிடிக்கிறேன் என்று உதவி இயக்குனர் வேலையை செய்திருக்கிறார். அந்த சமயத்தில் ஷூட் நடக்கும் போது பலர் பேசிக்கொண்டிருக்கும் போது டென்சனான நயன் கத்தி கூச்சலிட்டு சைலெண்ட் என்று கத்தியுள்ளார்.