அட்ஜஸ்ட் செய்ய சொன்னாலும் கேட்கமாட்டார்!! கணவரை பற்றி நடிகை நீலிமா ராணி..

Serials Marriage Neelima Rani Tamil Actress
By Jai Jul 23, 2026 02:15 PM GMT
Report

நீலிமா ராணி

தமிழ் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி, தன்னைவிட அதிக வயதுடைய இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்து வரும் நீலிமா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, காதல் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் எனக்கு கணவராகக் கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய புண்ணியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்வேன். அவர் ஒரு மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர் என்றுகூட நான் சொல்வேன். ஏனென்றால் அவருக்குள் அவ்வளவு பொறுமை, உண்மை, நேர்மை இருக்கிறது. ஒரு மனிதாரால் இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்று நானே பலமுறை ஆச்சரியப்பட்டு யோசித்துள்ளேன்.

காதல் திருமணம்

ஒரு இடத்தில் சும்மா சிரித்துப் பேசினால், அந்த இடத்தில் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என்றால் கூட, அவர் அதை செய்யமாட்டார். எனக்கு அப்படி வரும் வாய்ப்பு தேவையில்லை என்று கூறுவார்.

அட்ஜஸ்ட் செய்ய சொன்னாலும் கேட்கமாட்டார்!! கணவரை பற்றி நடிகை நீலிமா ராணி.. | Neelima Rani Interesting Share About Her Husband

ஒருவரிடம் சும்மா அவர்கள் முகத்திற்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து பேசுங்கள் என்று நான் சொன்னால்கூட, எதற்காக நாம் அப்படி போலியாக பேச வேண்டும் என்று கூறுவார். மற்றவர்களிடம் மட்டுமில்லை என்னிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

அவருக்கு சரி என்றால் சரி, தப்பு என்றால் தப்பு அவ்வளவு தான். அவர் ரொம்ப நேர்மையானவராகவும், மிகவும் அழகான மனம் கொண்ட மனிதர். எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம், பலர் எங்களை பார்த்து கேலி கூட செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பக்குவம் தான் எங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் என்று நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.