தாடி வெச்சது ஒரு குத்தமா.. இப்படி தாக்குறாங்க!
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒரு வித்தியாசமான தலைப்பில் விவாதம் நடப்பது வழக்கம். அப்படி இந்த வாரம் வந்திருக்கும் தலைப்பு தாடி பற்றியது தான். விதவிதமாக தாடி வைத்திருப்பவர்கள் ஒரு புறம், தாடி 'overrated' என சொல்பவர்கள் மறுபுறம் என விவாதம் இருதரப்புக்கும் நடந்திருக்கிறது.
தாடி வைத்திருப்பவர்கள் சோம்பேறிகள் என ஒருவர் விமர்சித்து இருக்கிறார், பார்க்கவே பயமாக இருகிறது.. தள்ளி நிற்க வேண்டும் என தோன்றும் என் பெண் ஒருவர் தாடி வைத்தவர்களை பற்றி தாக்கி பேசி இருக்கிறார். தாடி மீசை வைத்தால் தான் ஆண்மை என பிம்பம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என மற்றொருவர் விமர்சித்து உள்ளார்.
இந்த ப்ரொமோவை பார்த்த நெட்டிசன்கள் தொகுப்பாளர் கோபியும் தாடி வெச்சிருக்கார் என சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் சிலர் அடுத்த வாரம் குடை vs ரெயின் கோட் விவாதம் வையுங்க என காமெடியாக கமெண்ட் செய்து இருக்கின்றனர்.