விஜய்யை செஞ்சது பத்தாதா!! சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத நெல்சன்..

Rajinikanth Nelson Dilipkumar Jailer
By Luxshan Aug 22, 2022 08:59 AM GMT
Report

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்திற்கு பிற்கு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகும் என்று சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இடையில் பீஸ்ட் படம் படுமோசமான விமர்சனத்தால் நெல்சன் இந்தியா முழுவதிலும் விமர்சிக்கப்பட்டார்.

கதையை சரியான கோணத்தில் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத நெல்சன் சூப்பர்ஸ்டாரை வைத்து தை ஈடுகட்ட வேண்டும் என்ற நோக்கில் ஜெயிலர் பட வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் ஷூட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார்.

நெல்சன் ரஜினிகாந்தை புது வகையான லுக்கில் மாற்றியுள்ள ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முறைத்தபடி சூப்பர் ஸ்டார் நடக்கும் போஸ் ரசிகர்களை மிரளவைத்துள்ளது. ஆனால் ஒருசிலரோ, விஜய்யை செஞ்சது பத்தாதுன்னு இப்போ சூப்பர் ஸ்டாரா என்று கலாய்த்து வருகிறார்கள்.