முடியல தலைவரே! மழை மீது பழியை போட்ட ரஜினி.. நெட்டிசன்கள் கிண்டல்
அண்ணாத்த படம் கடந்த தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்த ரஜினி ரசிகர்களே தியேட்டரில் இருந்து வெளியில் வந்து 'படம் படுமோசம்.. உட்கார முடியல.. சீரியல் மாதிரி இருக்கு' என கண்டபடி கழுவு ஊற்றினார்கள். விமர்சனங்களும் நெகடிவ் ஆக தான் வந்தது.
அதன் பின் ரஜினி இயக்குனர் சிவா வீட்டுக்கு சென்று அவருக்கு தங்க செயின் பரிசாக கொடுத்தார். ஓடாத படத்துக்கு எதுக்கு தங்க செயின் என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இந்நிலையில் தற்போது 50 நாட்கள் கழித்து ரஜினி அண்ணாத்த படம் நடித்த அனுபவம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் மழை வந்துவிட்டது என்றும், தீபாவளிக்கே மழை வந்திருந்தால் படம் தோல்வி அடைந்திருக்கும் என கூறி இருக்கிறார்.
இப்படி மழை மீது பழியை தூக்கி போட்ட ரஜினியை நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
"முடியல தலைவரே!"