எத்தனை முறை தான்டா ஏமாத்துவீங்க.. பாரதி கண்ணம்மா ப்ரோமோவால் விஜய் டிவியை திட்டிய நெட்டிசன்கள்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தான் அந்த சேனலின் நம்பர் ஒன் தொடராக இருந்து வருகிறது. அதிலும் ரோஷ்ணி ஹரிப்ரியன் வெளியேறிய பிறகு புது கண்ணம்மா வந்த பிறகும் இந்த தொடருக்கான மவுசு கொஞ்சமும் குறையவே இல்லை.
இன்று விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் ப்ரோமோ பார்த்து நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் விஜய் டிவியை திட்டி வருகின்றனர். அப்படி என்ன அதில் இருக்கிறது என கேட்கிறீர்களா.. பாரதி கன்னத்தில் கண்ணம்மா முத்தம் கொடுப்பது போல தான் அந்த காட்சி இருக்கிறது.
வழக்கமாக முழு எபிசோடும் முன்கூட்டியே ஹாட்ஸ்டாரில் வந்துவிடும் என்பதால் "Hotstar-இல் பார்த்தவர்கள் தங்கள் வாய்க்கு பூட்டை போடவும்.. " என விஜய் டிவி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
எப்படியும் அது கனவு என்று தான் காட்டப்போறீங்க, அதை ஹாட்ஸ்டார் பார்க்காமலேயே கூட சொல்லுவோம் என நெட்டிசன்கள் தற்போது ட்விட் செய்து திட்டி வருகின்றனர்.
எப்போதாவது கனவு என காட்டினால் பரவாயில்ல, எப்போவுமே அப்படி தான் என்றால் என்ன செய்வது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Kanavu thana adhukkenda ivvapavu scene
— என்னமோ போடா (@iamjoker145) December 10, 2021