பிரியங்கா நீயெல்லாம் அதை பத்தி பேசலாமா.. குறும்படம் போட்டு வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

By Parthiban.A Dec 09, 2021 04:30 AM GMT
Report

பிக் பாஸ் 5ல் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பிரியங்கா. தற்போது வீட்டில் படுபயங்கரமாக ஒலிப்பது அவரது குரல் தான். ஏன்மா எதாவது ஸ்பீக்கரா முழுங்கிட்டியா என கேட்கும் அளவுக்கு எதற்கெடுத்தாலும் கத்தி கொண்டிருக்கிறார். அவரிடம் சண்டைக்கு போனால் என்ன ஆகும் என பிக் பாஸ் பார்க்கும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் சிபி, நிரூப் உள்ளிட்டவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது பிரியங்கா வந்து, 'நீங்கள் சோறு போட்டு சாப்பிடும்போது மற்றவர்களுக்கும் இருக்குமா என பார்த்து சாப்பிடுங்கள்' என கூறினார். அதை கேட்டு சிபி கோபம் அடைந்தார். சாப்பிடும்போது இப்படியா பேசுவ என கேட்டுவிட்டார் அவர்.

இந்நிலையில் நெட்டிசன்கள் பிரியங்காவை மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். பிரியங்கா கிட்சன் கேபினட் பின்னர் ஒளிந்துகொண்டு ஆரஞ்சு பழத்தை திருட்டு தனமாக சாப்பிடும் வீடியோவை போட்டு பிரியங்காவை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இப்படி திருட்டுத்தனமாக யாருக்கும் கொடுக்காமல் சாப்பிடும் நீயெல்லாம் சப்பாடு பற்றி பேசலாமா என குறும்படமா போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மேலும் பிரியங்கா திருட்டுத்தனமாக ஸ்டோர் ரூமில் இருந்து ஸ்வீட் சாப்பிடும் வீடியோவையும் பதிவிட்டு வருகின்றனர்.