தலைவா இதை மறந்துடீங்க பாருங்க! ரஜினியை கலாய்த்த நெட்டிசன்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கிறார். அவர் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி இருக்கும் ஹூட் என்ற சமூக வலைத்தளத்தில் தான் ரஜினி தனது குரல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அண்ணாத்த படம் பற்றி சென்ற வாரம் அவர் அதில் பேசி இருந்தார். அது வைரல் ஆனது.
இந்நிலையில் இன்று 83 படத்தை பற்றி ரஜினி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். படத்தை அவர் ஆஹா ஓஹோ என புகழ்ந்திருக்கிறார். ஆனால் அதில் குரல் பதிவை அவர் போடவில்லை.
"தலைவா உங்க மகள் ஆப் லிங்க் போட மறந்துடீங்க" என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சௌந்தர்யா தொடங்கி இருக்கும் பிஸ்னஸ் என்பதால் தான் ரஜினி தொடர்ந்து அதை விளம்பரப்படுத்த பதிவுகள் அதில் போட்டு வருகிறார். இந்த முறை அதை மறந்துடீங்க என தான் இப்போது கலாய்த்து வருகின்றனர்.
தலைவா .. ஹூட் பேஜ் லிங்க் கொடுக்க மறந்துட்டீங்க .. https://t.co/qKfvn2B10r
— r͢o͢j͢a͢ (@rojatv) December 28, 2021
sir not using ur daughters's app this time ?
— Nrupatunga pulikeshi (@buddhikajames) December 28, 2021
hoote ல போட்டு தானே ஜீ இங்கே share பண்ணுவீங்க
— தமிழன் ஹிந்து அல்ல (@home_vanderi) December 28, 2021