NASA-வே இந்த ஹிந்தி சீரியல் வீடியோ பார்த்தால் அதிர்ச்சி ஆகிடும்!
சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தற்போதைய காலத்தில் பிரம்மாண்டமாக மாறி வருகின்றன. ஆனால் இந்த காலத்திலும் சில சீரியல்களில் எதார்த்தம் குறைந்து மாயாஜாலம் அதிகம் இருக்கும் வகையில் இருக்கின்றன.
சில நேரங்களில் சீரியலில் வரும் காட்சிகளும் கடும் விமர்சனனத்திற்கு உள்ளாவதுண்டு. எதார்த்தத்தை விட எல்லைமீறி எடுக்கப்படும் சில சீரியல்கள் நெட்டிசன்களிடம் சிக்குவதுண்டு. தற்போது அப்படி ஒரு வீடியோ காட்சி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Yehh Jadu Hai Jinn Ka என்ற சீரியலில் பெண் ஒருவர் தான் நிலவின் துண்டை கொண்டு வருபவரை தான் திருமணம் செய்வேன் என கூறுகிறார். ஒருவர் லேசர் கயிறு கொண்டு நிலாவை இழுக்கிறார். மேலும் ஒருவர் காரில் விண்வெளியில் பறக்கிறார்.
நிலாவுக்கு அருகில் சென்று எதையோ செய்து அதை உடைய வைக்கிறார். நிலா துண்டுதுண்டாக உடைந்து பூமியில் விழுகிறது. இப்படி ஒரு காட்சியை நாசா பார்த்தாலே ஷாக் ஆகிவிடும் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Planning to forget that I watched this clip https://t.co/qziu1Fj9k9
— Mervyn Rozz (@mervyrozario) December 13, 2021