நன்றி மறந்தாரா விஜய்!! கேப்டன் நினைவு நாளுக்கு வராத காரணம் இதுதானாம்..
கேப்டன் நினைவு நாள் பூஜை
கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 28 ஆம் தேதி பலரும் தங்கள் நினைவஞ்சலியை கேப்டன் அவர்களுக்கு செலுத்தினர். அதில் தேமுதிக சார்பில் கேப்டனுக்கு குருபூஜை நடந்துள்ளது.
குருபூஜைக்கு பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவர் வருவார் என்றும் பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் கடைசி வரை விஜய் வரவில்லை. அதுவும் ஒரு பதிவு கூட விஜய் போடாமல் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியையும் கேள்வியை எழுந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவா வரை செல்ல முடிந்த விஜய், சினிமாவில் முதல் வெற்றியையும் வாய்ப்பையும் தந்து உதவிய விஜயகாந்த் நினைவு நாளுக்கு ஒரு பதிவினை கூட போடவில்லையே என்று விமர்சித்து வந்தனர்.
வராத காரணம்
இதற்கு தவெகவினரும் விஜய் ரசிகர்கள் அந்த பூஜைக்கு காவல் துறையினர் அனுமதி தரவில்லை என்பதால் தான் விஜய் வரவில்லை என்றும் கேப்டன் குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் விஜய் ஃபோன் செய்து பேசியதாகவும் கூறி வருகிறார்கள்.