திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படியொரு முடிவெடுத்த நடிகை நிக்கி கல்ராணி! அதுவும் இதுக்காகவா?

Aadhi Nikki Galrani
By Edward May 29, 2022 08:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை நிக்கி கல்ராணி. இப்படத்திறகு பிறகு கன்னடம், மலையாள படங்களில் நடித்த நிக்கி யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன், மரகத நாணயம், ஹரஹர மகாதேவி, கலகலப்பு 2, சார்லி சாப்லின் 3 போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகிய நிக்கி நடிகர் ஆதியை சில வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி இருவருக்கும் நிச்சயமான நிலையில் மே 18ல் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமாகி 10 நாட்களில் நிக்கி கல்ராணி ஆதியை பிரிந்து வேலையில் கவனம் செலுத்தியிருக்கிறாராம். திருமணமாகிய கையோடு பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆரம்பிக்கவுள்ள வாய்மையே வெல்லும் என்ற ரியாலிட்டி ஷோவிற்கு நடுவராக பங்கேற்றுள்ளாராம்.

ஜூன் 3ல் ஆரம்பிக்கவுள்ள இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க திறமை அடிப்படையிலான போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளார்களாம்.