காதலுக்கு எண்ட்! யாருக்கும் தெரியாமல் நடிகரை நிச்சயம் செய்த பிரபல நடிகை நிக்கி..
தமிழ் சினிமாவில் அக்கடத்தேசத்து நடிகைகள் அறிமுகமாகி முன்னணி நடிகையாகி பிரபலமாவது சகஜம். அப்படியொரு இடத்தினை பிடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி.
ஜிவி பிரகாஷுடன் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து, யாகாவராயினும் நா காக்க, கோ2, வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த நிக்கி கல்ராணி நடிகர் ஆதியுடன் மரகத நாணயம், யாகாவராயினும் நா காக்க படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அப்படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஏற்பட காதலித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் ஆதி வீட்டு விஷேசத்திற்கு நிக்கி கல்ராணி சென்று வருவதுமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆதி - நிக்கி கல்ராணிக்கும் ரகசியமாக நிச்சயத்தார்த்தம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. பெரியளவில் நடத்தப்படாமல் முக்கியமானவர்களை வைத்து நிச்சயத்தை முடித்துள்ளார்களாம்.