அப்போதே சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்தேன்... பிறகு, நடிகையின் பேட்டி

Nivetha Pethuraj Tamil Actress
By Yathrika Jun 15, 2026 12:30 PM GMT
Report

நிவேதா பெத்துராஜ்

கடந்த 2016ம் ஆண்டு தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்த நிவேதா 2023ற்கு பிறகு படங்கள் நடிக்கவில்லை. இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தவர் இந்த வருடம் Sing Geetham படத்தில் நடித்துள்ளார்.

அப்போதே சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்தேன்... பிறகு, நடிகையின் பேட்டி | Nivetha Pethuraj Plan To Quit Cinema

அண்மையில் ஒரு பேட்டியில் நிவேதா பெத்துராஜ் பேசுகையில், கடந்த 2023ம் ஆண்டோடு சினிமாவுக்கு குட்பை சொல்ல நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்ப்பாராத பாதையில் அழைத்துச் சென்று சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக் பஸ்டர் படத்தில் கொண்டு வந்துள்ளது.

என்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்ததற்காக இயக்குனர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. நாக் அஸ்வின் மட்டும் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்காவிட்டால் இந்நேரம் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன் என கூறியுள்ளார்.