AI தொழில்நுட்பம் குறித்து நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு

Nivetha Pethuraj
By Yathrika Nov 02, 2025 05:30 AM GMT
Report

நிவேதா பெத்துராஜ்

நடிகர் அஜித், சினிமாவை தாண்டி விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துபவர்.

சமீபத்தில் கார் ரேஸ் முடித்தவர் மீண்டும் துப்பாக்கி சூடிதலில் ஆர்வம் காட்டி வந்தார். இடையில் பல வருடங்களுக்கு பிறகு அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியும் வைரல் ஆகி வந்தது.

அஜித்தை போலவே சினிமா, விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகை தான் நிவேதா பெத்துராஜ்.

AI தொழில்நுட்பம் குறித்து நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு | Nivetha Pethuraj Shocking Post About Ai

பேட்மிண்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் கார் ரேஸிங்கிலும் ஆர்வம் காட்டுகிறார்.

இவர் சமீபத்தில் AI தொழில்நுட்பம் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், அபத்தமான AI வீடியோக்கள் உண்மை போல் காட்சி அளிக்கும் போக்கு மிகவும் மோசமானது, இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தாகிவிடும், மிகவும் ஆபத்தானது என பதிவு செய்துள்ளார்.