பள்ளிபருவத்தில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது! ஷாக் கொடுத்த மதுரை பெண் நடிகை நிவேதா..

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்து காணப்படும் சூழலில் மதுரை பெண்ணாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பிறந்தது மதுரை என்றாலும் துபாய்யில் படிப்பை முடித்து பின் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் அறிமுகமானார்.

பின் தமிழ், தெலுங்கு என நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் கையில் 4,5 படங்களில் நடித்து வருகிறார். குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் க்ளாமரில் கலைகட்டி வருகிறார். பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் கதையின் முக்கியத்திற்கு மட்டுமே கவர்ச்சியை காட்டுவதால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜ், எப்போதும் வெளிப்படையாக, பளீச்சென பேசக்கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் இவர், சிறு வயதில் தனக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி கூறியுள்ளார். ஆம், சிறு வயதில் பொருட்களை திருடும் பழக்கம் எனக்கு இருந்தது.

பள்ளியில் இருந்து, சாக்பீஸ், சிலேட், கடைகளில் மிட்டாய் என, நான் திருடியது அதிகம். ஆனால், பிற்காலத்தில், தவறு என்பதை உணர்ந்து, திருந்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்