சிவகார்த்திகேயன் போல் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்படும் நண்பர்.. பிரியங்காவே கதியாக இருக்கும் நிலை..
பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி சினிமா வாய்ப்பு பெற்று உச்சத்தை தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் குறுகிய காலத்தில் எல்லை இல்லாத அளவிற்கு வாய்ப்பை பயன்படுத்தியவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
அதிவும் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தும் வருகிறார். அவருக்கு இணையாக பல தொகுப்பாளர்கள் விஜய் தொலைக்காட்சியில் உச்சத்தில் இருந்தும் கூட வெள்ளித்திரையில் மற்றவர்களால் சாதிக்க முடியவில்லை.

அப்படி வெள்ளித்திரையை நம்பி வந்து ஏமாந்து போனவர் தான் மா கா பா ஆனந்த். சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அதுஇதுஎது என்ற நிகழ்ச்சியை அவருக்கு அடுத்து மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வந்தார்.
அந்நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் அவரை நம்பி பல நிகழ்ச்சிகளை அந்நிறுவனம் கொடுத்து சக்சர்ஸ்-ஆக நடத்தியும் வருகிறது. ஆனால் வெள்ளித்திரை மட்டும் அவருக்கு கை கொடுக்காமல் போனது.

வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்த மாகாபா நடிப்பில் கோட்டையை விட்டுவிட்டார். அப்போதில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வெளியே வராமல் விஜய் தொலைக்காட்சியில் பல லட்ச சம்பளம் வாங்கும் டாப் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
கோடியில் சொத்துக்களை வைத்து பல விளம்பரங்கள் மூலம் வெளிநாடு வெளிநாடாக ஊர் சுற்றியும் விஜே பிரியங்காவுடன் தொகுத்து வழங்கியும் காலத்தை போக்கி வருகிறார்.