ஆபிஸ் சீரியல் நடிகை மதுமிளாவா இது!! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே..
தொலைக்காட்சி சீரியல் மூலம் பலர் பிரபலங்களாக மாறி சினிமா வாய்ப்பினை பெற்று வருவார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது ஆபிஸ் சிரீயல்.
ஆபிஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிளா. இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து இலங்கை பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல சீரியல் ஆபிஸில் லக்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இதையடுத்து பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவதொர என்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். கடந்த ஆண்டு பெலிக்ஸ் ஜேம்ஸ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமாகி கனடாவில் கணவருடன் வசித்து வந்தார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி வீட்டில் தன் பெண் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தையும் தன் மாடலிங் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


